1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2016 (14:47 IST)

எம்எல்ஏ என்னிடம் தவறாக நடந்தார்: இளம்பெண் புகார்

டெல்லி அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வால் மீதான இளம்பெண்ணின் மானபங்க புகார்.


 
 
டில்லி, தியோபதி தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வால். இவர் மீது கிரேட்டர் கைலாஷ் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தன்னிடம் எம்.எல்.ஏ., தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார்.
 
இவரின் புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. சில மாதங்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஒருவர் பெண் ஒருவரை ஆபாசமாக திட்டியதாக புகார் வந்தது.
 
தற்போது மேலும் ஓர் எம்.எல்.ஏ. மீது பெண் ஒருவர் புகார் கூறியிருப்பது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.