1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 25 ஜனவரி 2017 (18:43 IST)

தமிழ்நாட்டை அடுத்து போர்கொடி தூக்கும் கர்நாடகா

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரி நடந்த போராட்டத்தை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கம்பளா போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


 

 
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கோரி போராட்டம் நடந்தது. இதனால் மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போல் கர்நாடகா மாநிலத்தில் எருமை மாட்டை சேற்றில் விட்டு விளையாடுவது கம்பளா போட்டியாகும். இதுவும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. 
 
தற்போது கம்பளா விளையாட்டு குழுவினர், கர்நாடகா அரசு கம்பளா போட்டி நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. 
 
தற்போதைய பாஜக தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா, கம்பளா போட்டி நடத்த கர்நாடக அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.