புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 11 ஜனவரி 2017 (15:47 IST)

மோடி அறிவிப்பு தெரியாதாம்...ரூ.5 லட்சம் பழைய நோட்டு வைத்திருந்த பாட்டி

கேரளாவைச் சேர்ந்த சதி என்ற 75வயது பாட்டி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை காலதாமதாக தெரிந்துக்கொண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


 

 
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே வரப்புழா என்னும் சிற்றூரில் சதி(75) என்பவர் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டில் மின்சாரம், ரெடியோ என எந்த பொருட்களும் இல்லை. அவருக்கு தேவையான பொருட்களை வாங்க எப்போதவதுதான் வெளியே செல்வார். எல்லா நேரங்களிலும் வீட்டிலேதான் இருப்பார். 
 
அண்மையில் காய்கறி வாங்க கடைக்கு சென்றுள்ளார். கடைக்காரரிடம் 500 ரூபாய் நோட்டை நீட்டியுள்ளார். கடைக்காரர் ரூபாய் நோட்டு செல்லாது என்று கூறியுள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த பாட்டி, ரூபாய் நோட்டு புதுசா தானே இருக்கு, கிழியவும் இல்லை ஏன் செல்லாது? என்று கேட்டுள்ளார்.
 
கடைக்காரர் மூலம் மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது பற்றி தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாட்டி தான் வீட்டில் வைத்திருந்த பணத்தை அவசரமாக வங்கிக்கு எடுத்துச் சென்றுள்ளார். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால்கெடு முடிந்துவிட்டதால் வங்கி அதிகாரிகள் ரூபாய் நோட்டுகளை மாற்ற மறுப்பு தெரிவித்து விட்டனர்.
 
இதனால் வங்கி வாசலில் நின்றுக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து வங்கி அதிகாரிகள், அவர் எங்கள் வங்கியில் தான் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அவர் எடுத்து வந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
 
சதி பாட்டி குறித்து அக்கம்பக்கம் வசிப்பவர்கள் கூறியதாவது:-
 
அவர் எப்போதும் வீட்டிலேயே தான் இருப்பார். அவர் வீட்டு அருகில் எங்களை நிற்க விட மாட்டார். இவ்வளவு கால வருடங்களில் எங்களிடம் இரண்டு அல்லது மூன்று முறை தான் பேசியிருப்பார். ரூபாய் நோட்டு விவகாரம் அவருக்கு தெரியும் என்று நினைத்தோம். இதுகுறித்து அவரிடம் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இவ்வளவு தொகை பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பார் என்று எங்களுக்கு தேரியாது, என்றனர்.
 
அவரின் நிலைமை அறிந்த ஊர் பஞ்சாயத்து கமிட்டி, ரிசர்வ் வங்கியை நாட உதவி செய்து வருகிறது. யாரையும் எளிதில் நம்பாத பாட்டி, இந்த உதவியையும் வேண்டாம் என்று மறுத்துள்ளார்.