வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 17 மே 2017 (13:19 IST)

பெண்களே உஷார் இது போன்ற காமுகர்கள் எங்கும் இருக்கலாம்! (வீடியோ இணைப்பு)

பெண்களே உஷார் இது போன்ற காமுகர்கள் எங்கும் இருக்கலாம்! (வீடியோ இணைப்பு)

ரயில் ஒன்றில் பயணிக்கும் நபர் ஒருவர் தன்னுடைய முன்னாள் நிற்கும் பெண்ணை யாருக்கும் தெரியாமல் ஆபாசமாக வீடியோ எடுக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி அந்த நபரை மாட்டி விட்டுள்ளது.


 
 
நாடுமுழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கோஷங்கள் சமீப காலமாக அதிகரித்தே வருகிறது. டெல்லியில்  நிர்பயா, தமிழகத்தில் நந்தினி, தற்போது ஹரியானாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் என பெண்களுக்கு எதிரான ஆண்களின் வக்கிரம் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

 

 
 
இன்னொரு பக்கம் குளியறையில், துணி மாற்றும் இடங்களில் கேமராக்களை பொருத்தி வைத்து அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி அவர்களது வாழ்க்கையை சீரழிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களையும் செய்து வருகின்றனர் சிலர்.
 
இந்நிலையில் ரயில் ஒன்றில் பயணிக்கும் ஒரு நபர் தனக்கு முன்னாள் நிற்கும் பெண்ணை வீடியோ எடுத்து அதனை சூம் செய்து பார்க்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
 
இதில் வேடிக்கை என்னெவென்றால் யாரும் தான் வீடியோ எடுப்பதை பார்த்துவிடக்கூடாது என்பதை கவனித்து ஏதோ மும்மரமாக வேலை செய்வது போல சீன் போடுகிறார். ஆனால் அவர் வீடியோ எடுப்பது அவருக்கு பின்னால் இருக்கும் கண்ணாடியில் தெரிவது அவருக்கு தெரியாமல் போனது. இதன் மூலம் அந்த கீழ்த்தரமான செயலை செய்த காமுகன் கையும் களவுமாக மாட்டியுள்ளான்.