கள்ளக்காதல்: நிர்வாணமாக மரத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்ட பெண்
ராஜஸ்தான் மாநிலத்தில் கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண்ணை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த லாலு ராமுடன் காதல் ஏற்பட்டு, அவருடன் ஒன்றாக சேர்ந்து வாழ தொடங்கினார்.
இதையறிந்த அந்த பெண்ணின் முன்னாள் கணவர் கடந்த 20ஆம் தேதி அடியாட்களுடன் சேர்ந்து ராமுவையும், அந்த பெண்ணையும் சொந்த ஊருக்கு சென்று இழுத்துச் சென்றனர்.
அங்கு இருவரையும் மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்து அடித்து, இரண்டு நாட்கள் சித்திரவதை செய்துள்ளனர். இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய மாவட்ட நிர்வாகம் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காத கிராம தலைவர் மற்றும் ஒரு காவல் துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்தனர்.
இதுவரை இச்சம்பவத்தில் தொடர்புடைய 24 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை தேடி வருவதாகவும் காவல் துரை அதிகாரி தெரிவித்துள்ளார்.