தொழிலதிபரை கொன்று ஹோமகுண்டத்தில் எரித்த மனைவி,மகன்
தொழிலதிபரை கொன்று ஹோமகுண்டத்தில் எரித்த மனைவி,மகன்
கர்நாடக மாநிலத்தில் மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் சேர்ந்து தொழிலதிபரை கொன்று ஹோமகுண்டத்தில் எரித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த பஸ்கர் ஷெட்டி என்பவர் சவுதியில் தொழிலதிபராக இருந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் பாஸ்கர் ஷெட்டியின் மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், மனைவி, மகன் இருவரும் சேர்ந்து பாஸ்கர் ஷெட்டியை கொலை செய்து ஹோமகுண்டத்தில் எரித்துள்ளனர். இதற்காகவே தற்காலிகமாக ஹோமகுண்டம் ஒன்றையும் உருவாக்கி உள்ளனர்.
எரித்த சாம்பல், எலும்புகளை நதியில் கரைத்து உள்ளது, தெரியவந்தது.