செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2025 (14:36 IST)

என்னடா பித்தலாட்டம் இது? பெட்ரோலில் தண்ணீரை கலந்து விற்ற பங்க்! - வைரலாகும் வீடியோ!

Water mixed with petrol

ஹைதராபாத்தில் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நாடு முழுவதும் பெட்ரோல் விலையை அந்தந்த பெட்ரோலிய நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில், முழுவதும் தூய்மையான பெட்ரோலை விற்றால் விலை அதிகமாக இருக்கும் மக்களால் வாங்க முடியாது என்பதால் அதனுடன் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது.

 

ஆனால் ஹைதராபாத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் தண்ணீரையே கலந்து விற்றது அம்பலமாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் ஷெரிகுடாவில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது மாருதி ப்ரெஸ்ஸா காருக்கு பெட்ரோல் போட்டுள்ளார்.

 

பின்னர் சில கிலோ மீட்டர்கள் சென்றதுமே எஞ்சின் பழுதாகி வண்டி நின்றது. அதை மெக்கானிக்கிடம் கொண்டு சென்றபோது பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதால் எஞ்சின் பழுதாகிவிட்டதாக கூறியுள்ளார். அதை தொடர்ந்து அந்த பங்கிற்கு ஆட்களுடன் சென்ற ரமேஷ் ஒரு வாட்டர் பாட்டிலில் பெட்ரோலை பிடித்து தண்ணீரும், பெட்ரோலும் தனித்தனியாக பிரிவதை வீடியோ எடுத்துக் காட்டியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K