செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2017 (16:10 IST)

நடிகையிடம் அத்துமீறல் ; இது விளம்பரத்திற்காக நடந்தது - தொழிலதிபரின் மனைவி

தனது கணவர் விகாஷ் நடிகை சாயிரா வாசிமிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என விகாஷின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.


 
பிரபல பாலிவுட் நடிகையும், அமீர்கான் நடித்த 'டங்கல்' படத்தில் அவருடைய மகள் கேரக்டரில் நடித்தவருமான சைரா வாசிம், சமீபத்தில் தான் டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றதாகவும், அப்போது தனக்கு பின்னால் அமர்திருந்த நடுத்தர வயது சக பயணி ஒருவர் தனது காலால் தனது பின்புறத்தை சீண்டியதாகவும் ஒரு வீடியோவில் கண்ணீருடன் கூறினார். 
 
இந்த விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், மும்பையை சேர்ந்த விகாஸ் என்ற இளம் தொழிலதிபர்தான் சாய்ராவிற்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை மும்பை போலீசார் கைது செய்தனர். சாயிரா 18 வயது பூர்த்தியாகதவர் என்பதால், விகாஷ் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் பயணம் செய்ய விகாஷுக்கு தடை விதிக்கப்படும் என அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விகாஷின் மனைவி திவ்யா “என் கணவர் சமுதாயத்தி நல்ல இடத்தில் இருக்கும் தொழிலதிபர் ஆவார். என் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர். ஒரு இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அவர் மும்பை சென்றார். அப்படி ஒரு சோகமான மனநிலையில் அவர் மீது பழி சுமத்துவது அதிர்ச்சியளிக்கிறது. அப்படி நடந்திருந்தால் சாய்ரா ஏன் அவரை தாக்கவில்லை? ஏன் கூச்சல் எழுப்பவில்லை? இரண்டு மணி நேரம் கழித்து சமூக வலைத்தலங்களில் வீடியோ வெளியிட்டது ஏன்? இது முழுக்க முழுக்க விளம்பரத்திற்காகவே செய்யப்பட்டது” என குற்றம் சாட்டினார்.
 
இவரின் இந்த கருத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.