திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abi
Last Modified: புதன், 4 மே 2016 (20:06 IST)

விஜய் மல்லையாவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது

கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கி, இங்கிலாந்தில் வசித்து வரும் விஜய் மல்லையாவின் ராஜினாமா கடிதம் மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


 
 
விஜய் மல்லையா கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கி, நீதிமன்றத்தில் ஆஜராகாமல், இங்கிலாந்தில் இருந்துக் கொண்டு இந்தியாவுக்கு வர எண்ணம் இல்லை என்று கூறியதை தொடர்ந்து மாநிலங்களவை குழு “உங்களை ஏன் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக் கூடாது” என்று கடிதம் ஒன்றை அனுப்பியது. 
 
அதற்கு பதில் கடிதமாக கடந்த திங்கட்கிழமை விஜய் மல்லையா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்புனார்.
 
ஆனால் ராஜினாமா கடிதத்தில் சரியான நடைமுறை பின்பற்றவில்லை என்றும், மல்லையாவின் கையெழுத்தில் சந்தேகம் உள்ளது என்றும் மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி, மல்லையாவின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்து விட்டார்.
 
இந்நிலையில் தற்போது விஜய் மல்லையாவின் ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி ஏற்றுக்கொண்டார் என மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அறிவித்துள்ளார்.