காதலியின் தலையை வெட்டி வீடியோ.. சஞ்சய் தத் படத்தை பார்த்து இளைஞர் வெறிச்செயல்!
உத்தர பிரதேசத்தில் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்தின் ரசிகர் ஒருவர் தன் காதலியை திரைப்படத்தில் வருவது போல கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் புலாந்த்ஷர் பகுதியை சேர்ந்தவர் அந்தன் என்ற இளைஞர். இவர் சிறு வயதிலிருந்தே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் ரசிகராக இருந்து வந்துள்ளார். இவரும் ஒரு பெண்ணும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அந்த பெண் அந்தனை ப்ரேக் அப் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தன் தனது காதலியின் தலை துண்டாக வெட்டி படுகொலை செய்துள்ளார். மேலும் அந்த தலையை வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே வீடியோ வெளியிட்டுள்ளார். இதுபோல தனது நண்பர்கள் தன்னை ஏமாற்ற நினைத்தாலும் அவர்களுக்கும் இதுதான் நிலமை என எச்சரிக்கையும் செய்துள்ளார்.
இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சஞ்சய் தத் நடித்த ”கல்நாயக்” திரைப்படத்தை பார்த்து அதில் அவர் செய்தது போலவே தானும் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். அந்த இந்தி படத்தில் சஞ்சய் தத் பல்லு என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த அந்தனும் தனது பெயரை பல்லு என மாற்றி வைத்துக் கொண்டு இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளான். அவன் தனது முடி அலங்காரம், மீசை, தாடி உள்பட எல்லாவற்றையும் அந்த படத்தில் வரும் பல்லு போலவே வைத்துக் கொண்டுள்ளான். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K