வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (08:25 IST)

மாணவர்களே! முடிஞ்சா கொலை செய்யுங்க! பல்கலை துணைவேந்தர் சர்ச்சை பேச்சு

மாணவர்களே, உங்களுக்குள் சண்டை சச்சரவு வந்தால் என்னிடம் பஞ்சாயத்துக்கு வரவேண்டாம், முடிந்தால் கொலை செய்யுங்கள் என பல்கலை துணைவேந்தர் ஒருவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பூர்வாஞ்சல் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜா ராம் யாத்வ் என்பவர் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு பதிலாக விழா ஒன்றில் மாணவர்களை முடிந்தால் கொலை செய்யுங்கள் என்று பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

சமீபத்தில் விழா ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசிய பூர்வாஞ்சல் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜா ராம் யாதவ், 'மாணவர்களே, உங்களுக்குள் சண்டை வந்தால் சண்டையை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள், அழுது கொண்டே என்னிடம் பஞ்சாயத்துக்கு வராதீர்கள். உங்கள் எதிரியை அடியுங்கள், முடிந்தால் கொலை கூட செய்யுங்கள், அதன்பின் வருவதை பார்த்து கொள்ளலாம் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு நல்லொழுக்கம் போதிக்க வேண்டிய ஒரு துணை வேந்தரே, மாணவர்களை கொலை செய்ய தூண்டுவது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.