1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2019 (14:34 IST)

சாமியார் கனவில் வந்த சாமி: சைவத்துக்கு மாறிய கிராமங்கள்

உத்தரகண்ட்டில் சாமியார் கனவில் வந்து சாமி சொன்னதால் மொத்த கிராமமும் சைவத்துக்கு மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் சமோலி மாவட்டத்தில் உள்ளன பம்பா மறும் பர்கியா கிராமங்கள். இமயமலை தொடரில் அமைந்திருக்கும் இந்த கிராமங்கள் 6 மாதங்கள் கடுமையான பனியால் சூழப்பட்டிருக்கும். அந்த சமயம் அந்த கிராம மக்கள் மலையின் கீழ்பகுதிக்கு சென்று வசிப்பார்கள். அப்போது உடன் கோவிலில் இருக்கும் சாமி சிலையையும் எடுத்து சென்றுவிடுவார்கள். பனிக்காலம் முடிந்து மலைக்கு செல்லும்போது சாமி சிலையை கோவிலில் வைப்பார்கள். கோவிலில் வைக்கும் நாளன்று விலங்குகளை பலியிட்டு சமைத்து உண்பார்கள். பகவத் கீதை உபதேசம் நடைபெறும்.

அப்படி உபதேசம் முடிந்த அன்று அந்த ஊர் கோயில் சாமியாருக்கு சாமி வந்து ஆடி குறி சொன்னார். இன்னும் ஒரு வருடத்திற்கு விலங்கு பலி யாரும் கொடுக்கக்கூடாது, அசைவம் சாப்பிடக்கூடாது, சாமிக்கு கட்டுப்பட்ட கிராம மக்கள் எல்லாரும் இதை கடைபிடிக்க வேண்டும் என சாமி தன் கனவில் வந்து தெரிவித்ததாக கூறினார்.

இதனால் அந்த இரண்டு கிராம மக்களும் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவுகளையே சாப்பிட்டு வருகின்றனர். குளிரான மலைப்பிரதேசங்களில் வாழ்பவர்களால் அசைவம் சாப்பிடாமல் இருக்க முடியாது. உடலுக்கு வெப்பத்தை வழங்குவது அசைவ உணவுகள். ஆனால் அதை சாப்பிடாமல் அந்த கிராம மக்கள் வாழ்வது பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.