வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (12:18 IST)

ஸ்ட்ரெச்சர் கூட தரல.. சகோதரனை முதுகில் சுமந்து ஓடும் நபர்! – உத்தர பிரதேசத்தில் அவலம்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் கொரோனா நோயாளிக்கு ஸ்ட்ரெச்சர் கூட தராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவ வசதி பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் கொரோனா நோயாளிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் போதாமைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன.

இந்நிலையில் கோரக்பூரில் கொரோனா பாதித்த தனது சகோதரனை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார் நபர் ஒருவர். ஆனால் அவரை மருத்துவமனை வளாகத்திலிருந்து உள்ளே அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் வசதி கூட அங்கில்லை. இந்நிலையில் கொரோனா பாதித்த தனது சகோதரனை அந்த நபர் முதுகில் சுமந்தபடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.