திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (10:19 IST)

கேரளா சம்பவம்: யூடியூப் பார்த்து வெடிகுண்டு செய்ய கற்று கொண்டதாக வாக்குமூலம்..!

கேரளா மாநிலத்தின்  களமசேரியில் வெடித்த வெடிகுண்டுக்கு டொமினிக் மார்ட்டின் ரூ.3 ஆயிரம் செலவிட்டதாகவும் யூ டியூப் பார்த்து வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொண்டதாகும் போலீசாரின் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

குண்டு வெடித்த ஜெப கூட்டத்தில், மார்ட்டினின் மாமியார் பங்கேற்று இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெப கூட்டத்தில் தனது மாமியார் பங்கேற்று இருந்தது தெரிந்தும், முடிவில் இருந்து மார்ட்டின் பின்வாங்கவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், குண்டுவெடிப்பு நிகழ்த்திய மார்ட்டின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது உபா சட்டத்தின் கீழ் பிரிவு 16 (1ஏ) மற்றும், இந்திய தண்டனை சட்டம் 302, 307 மற்றும் 3 பிரிவு ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Mahendran