திருமண பரிசாக காண்டம் வழங்கும் அரசு!
திருமண பரிசாக காண்டம் வழங்கும் அரசு!
உத்தரபிரதேசத்தில் புதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்கு பரிசுப்பெட்டகம் ஒன்று வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதில் காண்டம் உள்ளிட்ட கருத்தடைக்கு உதவும் மாத்திரைகளையும் வழங்க முடிவு செய்துள்ளனர்.
ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து உத்தரபிரதேச அரசு புதிய திட்டம் ஒன்றை தொடங்க முடிவு செய்துள்ளது. புதிதாக திருமணமாகும் தம்பதியினருக்கு அரசின் சீராக குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரிசு பொருட்களை அதில் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
அதன் படி காண்டம், அவசரகால கருத்தடை மாத்திரை, சாதாரண கருத்தடை மாத்திரை மேலும் டவல், கைக்குட்டை, நகம் வெட்டி, சீப்பு, கண்ணாடி போன்றவையும் குடும்பக்கட்டுப்பாடு குறித்த கேள்வி பதில் அடங்கிய எளிமையான புத்தகமும் அந்த பரிசு பெட்டகத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
அரசின் அங்கீகாரம் பெற்ற சமீக சுகாதார செயல்பாட்டாளர்கள் இந்த பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி விளக்கம் அளிப்பார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு மிஷன் பரிவார் விகாஸ் என பெயர் வைத்துள்ளனர்.