1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2016 (17:10 IST)

சுகாதாரமின்றி வாழும் மக்கள்: இந்தியா முதலிடம்

பிரிட்டனை சேர்ந்த தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில், உலகிலேயே சுகாதாரமின்றி வாழும் நகர்ப்புற மக்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.


 

 
பிரிட்டனை சேர்ந்த வாட்டர் எய்ட் என்ற தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் சுகாதாரமின்றி வாழும் நகர்ப்புற மக்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
 
இந்திய நகர்புறங்களில் சுகாதாரமான கழிப்பிடங்கள் இல்லை. சுமார் 4 கோடி பேர் கழிவறையில் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். சுகாதாரமின்றி வாழும் நகர்ப்புற மக்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
 
மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் சுகாதார குறைப்பாடு உள்ளது. இதனால் தொற்றுநோய் அபாயம் அதிகரிக்கும். மேலும் சர்வதேச கழிப்பிட தினம் நாளை கடைப்பிடிக்கப்படும் வகையில், இந்த ஆய்வறிக்கையை பிரிட்டன் தனியார் அமைப்பு வெளியிட்டுள்ளது. 
 
சுவச் பாரத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி முன்னெடுத்து செல்கிறது. இருந்தாலும் பொது சுகாதாரத்தில் இந்தியா பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.