வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (10:40 IST)

மீண்டும் 9000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 26 பேர் பலி..!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 57,410 ஆக குறைந்துள்ளது ஆறுதலான செய்தியாகும்.
 
கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran