1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2017 (16:03 IST)

மொபைல் கடையை அடித்து நொறுக்கும் பெண்கள் - அதிர்ச்சி வீடியோ

3 பெண்கள் சேர்ந்து ஒரு மொபைல் கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
மேற்கு டெல்லியில் உள்ள ராஜோரி கார்டன் எனும் இடத்தில் உள்ள ஒரு மொபைல் கடையில், ஒரு பெண் கடந்த 5 மாதங்களுக்கு முன் ஒரு புதிய மொபைல் போன் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், அதில் ஏதோ பழுது ஏற்பட்டுள்ளது, எனவே, கடந்த 20ம் தேதி அந்த கடைக்கு தனது தாயுடன் சென்ற அந்த பெண், அந்த போனுக்கு பதில் புதிய போன் தரவேண்டும் என கேட்டுள்ளார். 
 
ஆனால், கடையில் பணிபுரிந்த ஊழியர்கள், அதற்கு மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியது. அந்த பெண்ணும் அவரின் தாயும், கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும், அவர்களோடு மற்றொரு பெண்ணும் சேர்ந்து கடையின் ஊழியரை தாக்கியுள்ளார். 
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது அந்த 3 பெண்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

Courtesy - ANI News