1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (17:22 IST)

மாயக்கண்ணாடி முன்னால் பேசினாரா மோடி? - மீண்டும் சர்ச்சை

அமெரிக்காவில் உரை நிகழ்த்தியது குறித்து உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் அதே வேளையில், அவரது பேச்சுக்குப் பின்னே ஒளிபரப்பு திரை இருப்பது தெரிய வந்துள்ளது.
 

 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது 66 முறை அமர்ந்தும் 8 முறை எழுந்து நின்றும் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர் என்று ஊடகங்கள் பெருமையாக எழுதி வருகின்றன.
 
ஆனால், மோடியின் பேச்சுக்குப் பின்னே ஒளிபரப்பு திரை [teleprompter] உள்ளது தெரிய வந்துள்ளது. மோடி உரையாற்றும் போது எதிரே ஒளிபரப்பு திரை வைக்கப்பட்டு உள்ளது. அதில், காட்டுப்பட்டும் வார்த்தைகளை வாசித்துதான் கைதட்டல் வாங்கி உள்ளார்.
 
வெளியிலிருந்து பார்ப்பதற்கு கண்ணாடி போலத் தெரியும் இந்த திரையின் எழுத்துக்கள், எதிரில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
 
2014 ஆம் ஆண்டு பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தப்பட்டபோது ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்றியபோது முதன்முதலாக மோடி பயன்படுத்தியதாக ஊடகங்கள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.