1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 14 ஜூலை 2016 (14:34 IST)

தலித் பெண்கள் உள்ளே சென்றதால், கோவிலை கங்கை நீரால் கழுவிய பூசாரி

உத்தர பிரதேச மாநிலத்தில் தலித் பெண்கள் கோவிலுக்குள் சென்றதால், அதன் புனித தன்மை கெட்டு போய் விட்டதாக கோவில் பூசாரி அவரது மனைவியுடன் சேர்ந்து கோவில் முழுவதையும் கங்கை நீரால் கழுவி சுத்தம் செய்துள்ளார். 


 

 
உத்தர பிரதேச மாநிலம் கன்பூர் அருகே உள்ள மங்கல்பூர் கோவிலில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண்கள், முன்னா தேவி என்ற பெண்மணியின் தலைமையில் வழிபட சென்றுள்ளனர். 
 
அப்போது அந்த கோவிலின் பூசாரி அவர்களை உள்ளே விட மறுத்துள்ளார். இதனால் உள்ளூர் மக்கள் சிலரின் உதவியுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று வழிப்பட்டனர். 
 
அவர்கள் சென்ற பின்னர் தலித் பெண்கள் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டதால் அதன் புனித தன்மை கெட்டு விட்டதாக கோவில் பூசாரி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மனைவியுடன் சேர்ந்து கோவில் முழுவதையும் கங்கை நீரால் கழுவி சுத்தம் செய்துள்ளார். தலித் பெண்களால் கெட்டுப்போன கோவிலின் புனிதத்தன்மையை கங்கை நீரால் மீட்டு எடுத்தாக கோவில் பூசாரி கூறியுள்ளார்.