1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 24 ஜூலை 2014 (15:55 IST)

தெலங்கானாவில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதல்: பலி எண்ணிககை 25 ஆக உயர்வு

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாய் பேட்டை அருகே பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் காக்கதியா என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து அழைத்து வரப்படுவது வழக்கம்.

வழக்கம் போல பேருந்தில் மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். அந்தப் பேருந்த மாசாயிபேட்டை ரயில்வே லெவல் கிராசிங் வழியாக சென்றது. அந்த லெவல் கிராசிங்கில் கேட் கீப்பர் இல்லை.

அப்போது இந்த ரயில் பாதையில் நாம்பேடு பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. அதைக் கவனிக்காத பேருந்த ஓட்டுநர் அந்த லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்றார்.

பேருந்து தண்டவாளத்தின் பாதி தூரம் சென்றபோது ரயில் பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

இந்தக் கோர விபத்தில் பேருந்தில் இருந்த 12 மாணவர்கள் உடல் சிதறி பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படிருந்தவர்களுள் பலர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆளில்லாத லெவல் கிராசிங்கால் இந்த விபத்து ஏற்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் ஆவேசம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

மாநில அமைச்சர்கள் பலர் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டனர். மாநில அரசு நிவாரணத் தொதையை அறிவித்துள்ளது.