வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 24 நவம்பர் 2022 (16:30 IST)

'பிஸ்லெரி' வாட்டர் பாட்டில் நிறுவனத்தை வாங்கும் 'டாடா': எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

bisleri
'பிஸ்லெரி' வாட்டர் பாட்டில் நிறுவனத்தை வாங்கும் 'டாடா': எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?
இந்தியாவின் பிரபலமான வாட்டர் பாட்டில் நிறுவனமான 'பிஸ்லெரி' நிறுவனத்தை டாடா வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
'பிஸ்லெரி' வாட்டர் பாட்டில் நிறுவனத்தை டாடா குழுமம் ரூபாய் 7000 கோடிக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பிஸ்லெரி' நிறுவனத்தின் தலைவர் செளஹான் இந்த நிறுவனத்தை தனக்குப் பிறகு தனது மகள் நடத்த விருப்பம் இல்லாததால் விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் இதனை அடுத்து ரிலையன்ஸ், டாடா உள்பட ஒரு சில நிறுவனங்கள் இந்த நிறுவனத்தை வாங்க முன் வந்த நிலையில் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே மினரல் வாட்டர் விற்பனையில் ஈடுபட்டுள்ள டாடா நிறுவனம் 'பிஸ்லெரி' நிறுவனத்தை வாங்குவதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய வாட்டர் தயாரிக்கும் நிறுவனமாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva