செவ்வாய், 4 அக்டோபர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated: வியாழன், 29 ஜூன் 2017 (14:41 IST)

தமிழக கிரிக்கெட் வீரர் விஷம் வைத்து கொலை...

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அவரது நண்பர்களாலேயே விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழ்நாட்டை சேர்ந்த சுபம் கௌதமன்(21) கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் வசித்து வந்தார். இவர் ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார். அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து பல ஊர்களிலும் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்று விளையாடி வந்தார். மேலும், இவர் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.
 
இவர் மீது இவர் நண்பர்கள் சிலருக்கு பொறாமை இருந்துள்ளது. அதில் ஒருவர் எம்.எல்.ஏவின் மகன் ஆவார். அவரும், மற்றொருவரும் சேர்ந்து கௌதமனை கொலை செய்ய முடிவெடுத்தனர். இந்நிலையில், பெங்களூரில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக, அவர்கள் இருவரோடும் கௌதமன் பேருந்தில் சென்றுள்ளார்.
 
அப்போது, உணவில் விஷத்தை கலந்து அவர்கள் கௌதமனுக்கு கொடுத்ததாக தெரிகிறது. இதை அடுத்து சிறிது நேரத்தில் கௌதமன் உயிருக்கு போராடியுள்ளார். எனவே அவரை அருகிலிருந்து ஒரு அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவர்கள் இருவரும் சென்றுவிட்டனர்.  ஆனால், சிகிச்சை பலனின்றி கௌதமன் மரணமடைந்தார்.
 
இந்த தகவல் எம்.எல்.ஏவிற்கு தெரிய வர, மகனை காப்பாற்ற முடிவெடுத்த அவர், மருத்துவமனைக்கு விரைந்து வந்து, கௌதமனின் பிரேத பரிசோதனையை முடிக்குமாறு நெருக்கடி கொடுத்துள்ளார். எனவே, கௌதமனின் பெற்றோர்கள் வருவதற்கு முன்பே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றி எழுதுமாறும் அந்த எம்.எல்.ஏ நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.
 
இந்த விவகாரத்தை மூடி மறைக்கும் முயற்சியில் அந்த எம்.எல்.ஏ தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், இது கன்னட மீடியாக்களும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், சமூகவலைத்தளங்களில் கௌதமனின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.