1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (22:33 IST)

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு நடத்தப்படும் தமன்னா தேர்வு

சிபிஎஸ்இ மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை எந்தவிதமான தேர்வு செய்து கொள்ளலாம் என்பதை அறிவதற்கு தமன்னா என்ற தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Try and Measure aNd Natural Abilities என்பதன் சுருக்கம் தான் TAMANNA தேர்வு ஆகும். 
 
7 பகுத்தறிவு திறன்களில் இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும், ஒவ்வொரு தளத்திலும் தலா 30 கேள்விகள் கேட்கப்படும் என்றும், ஒவ்வொரு தளத்திற்கும் 10 நிமிடங்கள் என 70 நிமிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
இந்த தேர்வில் ஒவ்வொரு திறன்களில் கிடைக்கும் மதிப்பெண்களை வைத்து மாணவர்கள் தங்களுடைய உயர் கல்வித் துறையை தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டாலும், அனைத்து மாணவர்களும் இந்த தேர்வை எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே எழுதலாம் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
இந்த தேர்வு மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமையை அறிந்து கொள்வதற்காக மட்டுமே என்றும் ஆனாலும் இந்த தேர்வை வைத்து ஒரு மாணவரின் அறிவுத்திறனை முழுவதுமாக கணக்கிடக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது