Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2016 (13:58 IST)
ஏப்ரல் 1 முதல் நெடுஞ்சாலை மதுகடைகளுக்கு தடை!!
2017, ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
இதனை அடுத்து ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டது.