புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (10:24 IST)

மார்ச் முதல் மே வரை... வெயிலில் தாக்கம் எப்படி இருக்கும்??

இந்தியாவில் மார்ச் முதல் மே வரை வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
இந்தியாவில் தமிழகம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மாதத்திலேயே வெப்பம் அதிகரித்து காணப்படுமாம். ஏப்ரல், மே மாதங்களில் 40 டிகிரியை தாண்டி வாட்டிவதைக்குமாம். உயிர் இழப்புகளும் இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஹரியானா, சண்டிகர், டெல்லி, சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவ வாய்ப்புள்ளதாம். அதாவது இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் வடமேற்கு வடகிழக்கு இந்தியாவில் வெப்பம் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
ஆனால், தென் இந்தியாவில் இயல்பை விட குறைவாக வெயில் பதிவாகும் என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.