1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (12:33 IST)

மே 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை!

வரும் மே 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. 

 
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும். 
 
இதனால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை என்பது வெயிலின் தாக்கத்துக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை குறிப்பதாகும். 
 
இதனைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக, வரும் மே 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப நிலை சாதாரண வரம்புகளை விட சில புள்ளிகள் அதிகமாகவே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.