ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 15 மே 2017 (17:03 IST)

சிறையில் பிரம்மை பிடித்தவர் போல் சுதாகரன் - சக கைதிகள் பீதி

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவின் உறவினர் சுதாகரன், பிரம்மை பிடித்தவர் போல் காணப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சசிகலா அவ்வப்போது கட்சி பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், அமைச்சர்கள் என சிலரை சந்தித்து பேசி வருகிறார். இளவரசி அவ்வளாவாக யாரிடமும் பேசவில்லை எனத் தெரிகிறது.
 
இதில் சசிகலா, இளவரசி ஆகியோர் ஒன்றாக ஒரு அறையிலும், சுதாகரன் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சுதாகரன் மட்டுமே, சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்தே பிரம்மை பிடித்தவர் போல் காணப்படுகிறாராம். திடீரெனெ சாமியார் போல் மாறி மந்திரங்களை கூறுகிறாராம். இதனால் அவருடன் அடைக்கப்பட்டிருக்கும் சக கைதிகள் பீதி அடைகின்றனராம்.
 
எனவே, அவருக்கு சில ஆன்மீக புத்தகங்களை ஒரு கைதி பரிசளித்து படிக்கச் சொன்னாராம். தொடக்கத்தில் அதில் சுதாகரன் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்தாலும், போகப்போக ஆன்மீக புத்தகங்களை அதிகமாக படிக்கத் தொடங்கி விட்டாராம். 
 
மேலும், தனக்கு ஆன்மீக புத்தகங்களை வாங்கி தருமாறு சிறை அதிகாரிகளிடம் நச்சரித்து வருகிறாராம். இது இப்படியே தொடர்ந்தால், சுதாகரன் பெரிய ஆன்மிகவாதி ஆகிவிடுவார் என சிறைக்கைதிகள் பேசிக் கொள்கின்றனராம்.