வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : சனி, 29 ஏப்ரல் 2023 (20:39 IST)

என் கணவரை தொழிலதிபர் ஆக்கினேன், என் மகள் அவர் கணவரை பிரதமர் ஆக்கினார்: சுதா மூர்த்தி

என் கணவரை நான் தொழிலதிபர் ஆக்கினேன் என்றும் எனது மகள் அவர் கணவரை பிரதமர் ஆக்கி உள்ளார் என்றும் இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாராயண மூர்த்தி இன்போசிஸ் நிறுவனம் தொடங்கும் போது அவரது மனைவி சுதா மூர்த்தி தான் பணம் கொடுத்து உதவினார் என்று என்றும் அதன் பிறகு தான் அந்நிறுவனம் கோடிக்கணக்கில் லாபம் பெறும் நிறுவனமாக மாறியது என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் நாராயண மூர்த்தி, சுதா மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தி கணவர் ரிஷி ரிஷி சுனக் தற்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுதா மூர்த்தி சமீபத்தில் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் ’என் கணவரை நான் தொழிலதிபராக்கினேன், என் மகள் அவர் கணவரை இங்கிலாந்து பிரதமர் ஆக்கினார், இதுதான் மனைவிகளின் மகிமை’ என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் ஆனதற்கு தனது மகள் அக்சதா மூர்த்தி தான் காரணம் என அவரது தாய் சுதா மூர்த்தி பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Edited by Mahendran