1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 25 ஜூன் 2015 (07:04 IST)

மானிய விலையில் உணவு வழங்கும் பிரச்சினையில் நாடாளுமன்ற குழுக்கள் கவனம் செலுத்த வேண்டும்: வெங்கையா நாயுடு

மானிய விலையில் உணவு வழங்கும் பிரச்சினையில் நாடாளுமன்ற குழுக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
 
நாடாளுமன்ற கேன்டீன்களில் எம்.பி.க்களுக்கு 150 சதவீத மானியத்தில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதும், இதற்காக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு ரூ.60 கோடியே 70 லட்சத்தை மானியமாக வழங்கி இருக்கும் தகவலும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
 
இது குறித்து நாடாளுமன்ற விவகார அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
 
அப்போது, இது போன்ற விவாதங்கள் நல்லதுதான் என்றும், இந்த பிரச்சினையில் நல்ல முடிவு ஏற்படும் என்றும் கூறினார்.
 
மேலும் இந்த பிரச்சினையில், தான் மட்டும் முடிவு எடுக்க முடியாது என்றும், மக்களவை மற்றும் மேல்-சபை குழுக்களின் உறுப்பினர்கள் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அப்போது வெங்கையா நாயுடு கூறினர்.