வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : சனி, 16 டிசம்பர் 2023 (10:34 IST)

டிசம்பர் 18ஆம் தேதி மீண்டும் தொடங்கும் தங்க பத்திரத் திட்டம்.. என்ன லாபம்?

மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்க பத்திர திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்து அதன் மூலம் தங்கத்தின் முதலீடு செய்யும் ஆர்வத்தை பொது மக்களுக்கு வளர்த்து வருகிறது.

பொதுவாக தங்கத்தை நகையாக வாங்கினால் அதில் செய்கூலி சேதாரம் என்று ஒரு குறிப்பிட்ட சதவீதம் வீணாகிவிடும். எனவே தங்க பத்திர திட்டத்தில் தங்கத்தை வாங்கி வைத்தால் அதற்கு ஒவ்வொரு வருடமும் இரண்டரை சதவீதம் வட்டி தருவது மட்டுமின்றி முதிர்வின்போது அன்றைய நாளில் தங்கத்தின் விலை என்னவோ அந்த விலை நமக்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி செய்கூலி, சேதாரம் என்ற எந்தவிதமான  கூடுதல் செலவும் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இருக்காது.

எனவேதான் தங்கத்தின் முதலீடு செய்பவர்கள் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதில் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால் இந்த திட்டத்தில் முதலீடு செய்துவிட்டால் 8 ஆண்டுகளுக்கு அதை எடுக்க முடியாது, 5 ஆண்டுகள் கழித்து விருப்பத்தின் பேரில் எடுத்துக் கொள்ளலாம்.  

இருப்பினும்  தங்கத்தில் செய்த முதலீட்டுக்கு இரண்டரை சதவீதம் வட்டி கிடைப்பது மற்றும் கூடுதல் செலவின்றி தங்கம் கிடைப்பதால் பலரும் இதனை பெற்று வருகின்றனர்.

தங்க பத்திரத் திட்டம்  வரும் டிசம்பர் 18ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கி 22ஆம் தேதி முடியவுள்ள நிலையில்  இந்த வாய்ப்பை தேவையானவர்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மீண்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தான் தங்கப்பத்திர திட்டம் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran