செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (22:59 IST)

சாப்பிட்டு கொண்டிருந்த சோனியாகாந்திக்கு திடீர் பிரச்சனை: மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் உடல்நலம் இன்றி இருந்ததால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார். அவரது உடல்நலம் சீராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று இரவு 8 மணிக்கு அவர் வழக்கம்போல் உணவு எடுத்து கொண்டிருந்தபோது திடீரென ஒவ்வாமை ஏற்பட்டது.





இதையடுத்து சோனியா காந்தி உடனடியாக டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சோனியாவின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் சோனியா காந்தி தற்போது நலமுடன் உள்ளதாகவும் நாளை அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியாவின் அருகில் இருந்து
ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

சோனியா காந்தி உடல்நலமில்லாத செய்தி அறிந்ததும் டெல்லி மருத்துவமனை முன் காங்கிரஸ் தொண்டர்கள் கவலையுடன் கூடியிருந்தனர்.