1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (19:42 IST)

ஆம்புலன்ஸுக்கு கொடுக்க பணம் இல்லை: தாயின் சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்

bike mother
ஆம்புலன்ஸுக்கு கொடுக்க பணம் இல்லை: தாயின் சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்
தாயின் சடலத்தை எடுத்துக்கொண்டு உள்ள பணம் இல்லை என்பதால் அவரது மகன் பைக்கில் தாயின் சடலத்தை எடுத்துக்கொண்டு சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவரின் தாய் பலனின்றி உயிரிழந்தார்
 
இதனையடுத்து அவரது உடலை வீட்டிற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல 5000 கட்டணம் கேட்கப்பட்டது. ஆனால் ரூபாய் 5000 செலுத்த அவரிடம் இல்லாததால் தனது பைக்கிலேயே தாயின் சடலத்தை கட்டி இழுத்துச் சென்றார் 
 
80 கிலோ மீட்டர் தூரம் வரை தனது கிராமத்திற்கு பைக்கிலேயே சடலத்துடன் சென்ற அவர் செல்லும் வழியில் தாயின் சடலத்தை எரிக்க விறகையும் வாங்கி கட்டி எடுத்துச் சென்றுள்ளார் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது