1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (19:53 IST)

தாயின் தலையை வெட்டி பூஜை செய்த மகன்

கர்நாடக மாநிலத்தில் பெற்ற தாயின் தலையை, மகன் வெட்டி பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கர்நாடக மாநிலம் சித்திரதூர்கா பகுதியைச் சேர்ந்த திம்மப்பா என்பவர் அவரது தாயுடன் வசிந்து வந்துள்ளார். இவருக்கு அவரது தாயுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்று முந்தினம் இரவு வழக்கம்போல் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த வாக்குவாதாம் முற்றிப்போய் மகன் ஆத்திரமடைந்து தாயின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார். அதன் பிறகு தாயின் தலையோடு வீட்டை சுற்றி வந்து பூஜை செய்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
 
சம்பவ இடத்திற்கு காவல்துறையினரிடம் தம்மப்பா, கடவுள் கனவில் வந்து தாயை பலி கொடுக்க சென்னதாக கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.