1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (16:01 IST)

தரமற்ற உணவு: வீடியோ பதிவு செய்த ராணுவ வீரர் பணிநீக்கம்!!

சமூக ஊடகங்களில், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக புகார் அளித்த தேஜ் பகதூர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 
 
சில மாதம் முன்னர் எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரியும் தேஜ்பகதூர் யாதவ் என்பவர், தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். 
 
இது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. 
 
இந்நிலையில், தேஜ்பகதூர் யாதவ் ஒழுங்கீன குற்றச்சாட்டுகளுக்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.