1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Modified: புதன், 5 ஜூலை 2017 (18:24 IST)

இந்தியா-இஸ்ரேல் இடையே வளர்ச்சிக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியப் பிரதமர் மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று இஸ்ரேல் சென்றுள்ளார். அவருக்கு நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ விமான நிலையத்திற்கே வந்திருந்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.

 
இந்தியப் பிரதமரின் வருகைக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம் என்று இஸ்ரேல் நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் குறிப்பிட்டார். மேலும் அவரது வீட்டில் இரவு விருந்தில் பெஞ்சமின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மோடியை சிறப்பித்தனர்.
 
தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ரியுவென் ரிவ்ளினை அவரது வீட்டில் மோடி சந்தித்துப் பேசினார். இதையடுத்து இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 
அவற்றின் விவரம்:
 
1. இந்தியா, இஸ்ரேல் இடையே தொழில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை அமைப்பு நிறுவுவது, தொழில்நுட்பத்திற்கான நிதி  ஒதுக்குவது.
2. இந்தியாவில் நீர் பாதுகாப்பு மேற்கொள்ளுதல்.
3. இந்தியாவில் நீர் சேமிப்பு மற்றும் பயன்பாட்டு சீர்திருத்தம் மேற்கொள்ளுதல்.
4. இந்தியா, இஸ்ரேல் வளர்ச்சி ஒத்துழைப்பு.
5. அணு அதிர்வு கடிகாரம் உருவாக்குவதற்கு திட்டமிடுதல்.
6. ஜியோ-லியோ (சாட்டிலைட் இணைப்புகள்) இணைப்புகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வது
7. சிறிய வகை சாட்டிலைட்கள் உருவாக்குவதில் ஒத்துழைப்பு போன்ற ஏழு ஒப்பந்தங்கள் இன்று இரு நாடுகளுக்கு இடையே  கையெழுத்தாகின.