வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (10:41 IST)

10 வருடமாக உடலுறவு இல்லை: உனக்கு எதுக்கு ஆணுருப்பு!. கட் செய்த மனைவி

திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் தன்னுடன் உடலுறவு செய்யாத கணவரின் ஆணுருப்பை அவரது மனைவியே வெட்டிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று வட இந்தியாவில் நடந்துள்ளது.



 


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 31 வயது வேத் பிரகாஷ் என்பவருக்கும் ரிதா யாதவ் என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் மனைவியை கணவருக்கு பிடிக்காத காரணத்தால் இருவருக்கும் இடையே பத்து வருடங்களாக தாம்பத்ய உறவு இல்லையாம்.

இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த ரிதாதேவி நேற்று முன் தினம் கத்தியை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த கணவரின் ஆணுருப்பை வெட்டிவிட்டார். இதனால் வலியில் துடித்த கணவர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். கணவர் தன்னை தொடர்ந்து வெறுத்து வந்ததாகவும், தன்னுடன் உடலுறவு கொள்ள விரும்பாத அவருக்கு ஆண் உருப்பு எதற்கு என்ற காரணத்தால் வெட்டியதாகவும் அவர் விசாரணையில் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.