1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 2 ஜூன் 2016 (17:21 IST)

தொடரும் செல்ஃபி சோகம்: சட்டக் கல்லூரி மாணவி பலி

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற போது கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றதில் தவறி விழுந்து பலியாகி உள்ள சம்பவம் நடந்துள்ளது.


 
 
ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பிரினிதா மேத்தா என்ற 21 வயது மாணவி தனது தோழிகளுடன் கர்நாடக மாநிலம் கோகர்ணா கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
 
சுற்றுலா வந்த பிரினிதா அந்த கடற்கரையில் உள்ள 300 அடி உயர கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். இதில் கால் தவறி கடலில் விழுந்தார் பிரினிதா.
 
உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் பிரினிதாவை உயிருடன் மீட்க முயன்ற அவரது தோழிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரினிதா சடலமாக உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டார்.
 
சமீபகாலமாக இந்தியாவில் செல்ஃபி எடுக்க முயன்று விபரீதமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.