செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (23:27 IST)

தங்கமகள் தங்கைக்கு வாழ்த்து கூறிய சசிகுமார்

ஐஸ்லாந்து நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச போட்டியான சேட்லைட் உலகக் கோப்பை வாள்வீச்சு பந்தயத்தில் ‘சேபர்’ பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை சி.ஏ. பவானி தேவி தங்கம் வென்றார். உலக அளவில் வாள் வீச்சில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பவானி தேவி பெற்றார்.



 


தங்கம் வென்ற தங்கமகள் பவானிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இயக்குனர், நடிகர் சசிகுமார் பவானிக்கு நேரில் வாழ்த்து கூறியதோடு அவருக்கு நினைவுப்பரிசும் வழங்கினார்.

பின்னர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து அவர், 'தங்கம் வென்ற தங்கைக்கு வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.