செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 29 நவம்பர் 2020 (15:29 IST)

மொரிஷியஸ் நாட்டில் ரூபாய் 2300 கோடி முதலீடு அதிர்ச்சியில் வருமான வரித்துறையினர்

மொரிஷியஸ் நாட்டில் ரூபாய் 2300 கோடி முதலீடு அதிர்ச்சியில் வருமான வரித்துறையினர்
நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக மும்பையைச் சேர்ந்த பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவன முன்னாள் இயக்குனருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர் 
 
சென்னை மும்பை ஐதராபாத் கடலூர் உள்பட 16 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த சோதனையின் மூலம் கணக்கில் காட்டப்படாத 450 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது 
 
அதுமட்டுமின்றி மொரிசியஸ் நாட்டில் ரூபாய் 2300 கோடி முதலீடு செய்து அந்த முதலீட்டுக்கான லாபத் தொகை மறைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வருமானவரித் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது