திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 19 அக்டோபர் 2020 (09:19 IST)

வானில் பறந்த ரோபோ மனிதன்: வேற்றுகிரகவாசியா என அச்சம்?

நொய்டாவில் வானில் வானில் பறந்த ரோபோ மனிதனால மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
 
டில்லி அருகே உள்ள நொய்டாவில் வானில் ரோபோ மனிதன் போன்ற பலூன் பறந்தது. பலூபில் காற்று மெல்ல மெல்ல குறைந்ததால் அது தன்கவுர் பகுதியில் இருந்த கால்வார் ஓரத்தில் சிக்கிக்கொண்டது. காலவாய் நீரில் ரோபோ மனிதனின் கால் மூழ்கி இருந்தது. 
 
இதை பார்க்க மக்கள் கூடியதோடு இது வேற்றுகிரகவாசியின் செயல் என அரசல்புறசலாக பேசிக்கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பலூனை கைப்பற்றி இதில் ஆபத்து ஏதும் இல்லை என மக்களுக்கு விளக்கினர். மேலும் இதை பறக்க விட்டது யார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.