அவுரங்கசீப் கல்லறையை இடித்தால் ரூ.23 லட்சம் பரிசு.. இந்து அமைப்பு அதிர்ச்சி அறிவிப்பு..!
அவுரங்கசீப் கல்லறையை அகற்றுபவர்களுக்கு 23 லட்சம் பரிசு வழங்கப்படும் என இந்து அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், அவுரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததையடுத்து, இந்து அமைப்புகள் கடந்த சில நாட்களாக அந்த கல்லறையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், "கிருஷ்ணஜன்ம பூமி சங்கர் நியாஸ்" என்ற அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், முகலாய மன்னர் அவுரங்கசீப், இந்து கோயில்களை இடித்தார், இந்து மத பெண்களை கொடுமைப்படுத்தினார், மராத்திய போர் வீரர்கள் மீது அநாகரிக செயல்களை கட்டவிழ்த்து விட்டார்.
அவருடைய கல்லறை இந்தியாவில் எதற்காக இருக்க வேண்டும்? அவருடைய கல்லறையை அகற்ற வேண்டும். இந்தியாவின் எந்த பகுதியில் அவருடைய கல்லறை இருக்கக்கூடாது" என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், அவுரங்கசீப் கல்லறையை இடித்து அகற்றும் நபர்களுக்கு "கிருஷ்ணஜன்ம பூமி சங்கர் நியாஸ்" சார்பில் 21 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே, அவுரங்கசீப் கல்லறையை அகற்றவில்லை என்றால், பாபர் மசூதிக்கு நேர்ந்த நிலைதான் ஏற்படும் என இந்து அமைப்பினர் மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran