திங்கள், 9 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (13:09 IST)

ரத்தன் டாடா உடல்நலம் குறித்து வதந்தி.. எக்ஸ் பக்கத்தில் அவரே அளித்த விளக்கம்..!

tata
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நிலை குறித்து வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா என்பதும், அவருக்கு தற்போது 86 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ரத்தன் டாடா குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது உடல்நிலை கவலைக்குரியதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, ரத்தன் டாடா தனது சமூக வலைத்தளத்தில், “என்னைப் பற்றிய உடல்நிலை குறித்த பரவி வரும் வதந்திக்கு விளக்கம் அளிக்கிறேன். நான் நன்றாக ஆரோக்கியமாக, நல்ல உடல்நிலையுடன் இருக்கிறேன். வழக்கமாக செய்யப்படும் மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை.

எனவே என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம். மீடியா பொறுப்புடன் இந்த வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Edited by Mahendran