ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்...


Murugan| Last Modified செவ்வாய், 25 ஜூலை 2017 (12:44 IST)
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

 

 
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜக முன்னிறுத்திய ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் இன்று தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
 
இன்று டெல்லியில் அதற்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது. ஜனாதிபதி மாளிகை மற்றும் பாராளுமன்ற வளாகம் கோலகலமாக காணப்பட்டன. ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்று மரியாதை கொடுத்தனர். அதன் பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 


இதில் மேலும் படிக்கவும் :