1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 அக்டோபர் 2018 (20:00 IST)

யார் சொன்னது ராகுல் பிரதமர் வேட்பாளர் என்று? ப.சிதம்பரம் டிவிஸ்ட்!

2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடளுமன்ற தேர்தல்இல் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என யார் சொன்னது என கேட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிஸ்ட் வைத்துள்ளார். 
 
முன்னதாக ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வென்றால், கூட்டணிக் கட்சிகள் என்னைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்தால், நான் பதவி ஏற்கத் தயார் என்று கூறி இருந்தார்.
 
இந்நிலையில் ப.சிதம்பரம், 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று காங்கிரஸ் கட்சி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
 
காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள் அவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜக அகற்றப்பட வேண்டும். அந்த இடத்தில் மாற்று அரசாக, முற்போக்கு அரசு அமர வேண்டும். 
 
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பிரதமர் பதவி என்பது ஒரு பொருட்டு அல்ல. காங்கிரஸ் கட்சி, எங்கள் கட்சியில் இருந்து பிரதமர் வர வேண்டும் என்றும் கூறவில்லை. எங்களின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், எங்களின் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து ஆலோசித்து பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் என கூறியுள்ளார்.