இந்தியாவில் கேழ்வரகைக் கொண்டு பீர் தயாரிக்கப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொதுவாக பீர் வகைகள் பார்லி மூலம் தான் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பெங்களூரில் கேழ்வரகினால் பீர் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு பீர் சங்க தலைமை பணியாளர் ரோஹித் இது பற்றி கூறியதாவது, 70% கேழ்வரகு மற்றும் 30% பார்லி கொண்டு இந்த பீர் உருவாக்கப்படுகிறது. இதில் இனிப்புக்காக வெல்லம் சேர்க்கப்படுகிறது என்கிறார்.
பண்டைய காலங்களில் ஆப்பிரிக்க நாடுகளிலும், நேபாள் மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் இந்த முறை பீர் தயாரிப்பு வழக்கத்தில் இருந்தது.