1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 18 ஜூன் 2015 (22:51 IST)

பகவத்கீதை போட்டியில் முதல் பரிசு வென்ற முஸ்லீம் சிறுமியை பாராட்டி பரிசு வழங்கிய நரேந்திர மோடி

இஸ்கான் இயக்கம் நடத்திய பகவத்கீதை போட்டியில் முதல் பரிசு வென்ற, முஸ்லீம் சிறுமி மரியம் அசிப் சித்திக்கை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி கவுரவித்தார். 
 

 
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இஸ்கான் இயக்கம் பகவத் கீதை போட்டி நடத்தியது. இந்தப் போட்டியில் மும்பையைச் சேர்ந்த மரியம் அசிப் சித்திக் என்னும் 12 வயது முஸ்லீம் மாணவி கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றார். அந்த முஸ்லீம் மாணவிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 
 
இந்நிலையில், அந்த முஸ்லீம் மாணவி தனது பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார். அப்போது அந்த மாணவியைப் பிரமதர் மோடி மகிழ்ச்சியுடந் பாராட்டினார். மேலும், அந்த மாணவிக்குப் பல்வேறு மதங்கள் குறித்த 5 புத்தகங்களைப் பரிசாக அளித்தார். 
 
அப்போது, பிரதமர் நிவாரண நிதி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்துக்குத் தலா ரூ.11 ஆயிரம் நிதியுதவியை மாணவி மர்யம் ஆசிப் சித்திக் வழங்கினார். 
 
இந்த நிகழ்வின் போது, சிறுமி மரியம் அசிப் சித்திக் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தனது இளம் தோழியைச் சந்தியுங்கள் என்று நரேந்திர மோடி பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.