ராம பக்தியால் வைக்கப்பட்டது என் பெயர்!? – அயோத்தியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்!
உத்தர பிரதேசத்தில் ராமாயண மாநாட்டை தொடங்கி வைத்த குடியரசு தலைவர் தனது பெயரின் ரகசியம் குறித்து பேசியுள்ளார்.
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த 4 நாள் சுற்றுபயணமாக உத்தரபிரதேசம் சென்றிருந்தார். பயணத்தின் நான்காவது நாளான நேற்று அயோத்தி சென்ற அவர் அங்கு ராமஜென்மபூமியில் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
மேலும் அங்கு 2 மாத காலத்திற்கு நடைபெற உள்ள ”ஜன ஜன் கே ராம்” என்ற ராமாயண மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் “ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை. இந்த நகரில் ராமர் நிரந்தரமாக வாழ்கிறார். அயோத்தி என்றால் யாரும் போர் தொடுக்க முடியாதது என்று பொருள். ராமர் மீதான பக்தியால்தான் என் பெற்றோர் எனக்கு ராம்நாத் கோவிந்த் என பெயர் வைத்தார்கள்” என பேசியுள்ளார்.