1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2023 (16:20 IST)

பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் விலகிவிடும் - பாஜக தேசிய தலைவர் சர்ச்சை பேச்சு

jp nadda
பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் விலகிவிடும் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதது. இதில், ஆளுங்கட்சியாக பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதேபோல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட  முக்கிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் வில்கிவிடும் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.

கர்நாடக மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை போட்டியிடும் தொகுதியில் ஒருபகுதியான ஹாவேரி நகரில்   இன்று பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தீசிய தலைவர் ஜேபி நட்டா, ''நீங்கள் பாஜ்கவுக்கு வாக்களிக்காவிட்டால் மோடியில் ஆசீர்வாதம் விலகிவிடும்,. பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் உங்களுக்கு வேண்டுமென்றால்,பாஜகவுக்கு வாக்களியுங்கள்'' என்று கூறினார்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா,  மக்களை மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.