திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (07:58 IST)

ஜோபைடனுடன் பேசிய பிரதமர் மோடி: இருநாட்டு உறவை வலுப்படுத்த ஆலோசனை!

ஜோபைடனுடன் பேசிய பிரதமர் மோடி
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் அவர்களுடன் பாரத பிரதமர் மோடி போனில் பேசி ஆலோசனை செய்துள்ளார்
 
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பைடன் அவர்களுடன் பிரதமர் மோடி பேசியதாகவும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
மேலும் இந்திய-அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தை குறித்து ஜோ பைடன் அவர்களுடன் மோடி உரையாற்றியதாகவும், இரண்டு நாடுகளும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பேசியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி கொரோனா, காலநிலை மாற்றம், இரண்டு நாடுகளின் ஒற்றுமை குறித்து ஆலோசனை செய்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அவருடைய வெற்றி மிகப் பெரிய பெருமை அளிக்கக்கூடிய விஷயம் என்றும், அமெரிக்க இந்தியர்களுக்கு இந்த வெற்றி உற்சாகம் அளிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 
 
இன்னும் ஒரு சில நாட்களில் அதிபராக பதவி ஏற்க இருக்கும் ஜோபைடன் அவர்களுடன் முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது